மொழியியலில் கணினி பயன்பாடு



கேரளப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆறு நாள்களாக நடைப்பெற்ற மொழித்துறையில் கணினி பயன்பாடு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு இன்று ஊர்திரும்பினேன்.மிக பயன்னுள்ளதாக இருந்து.நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள்.இதுதான் நான் முதல் முதலாக கேரளா சென்றது. சென்ற சனிக்கிழமை கிளம்பி ஞாயிறு காலையில் திருவனந்தபுரத்தைச் சென்றடைந்தேன்.கேரளா சென்ற நேரம் பயங்க வெயில்,பயங்கர வேர்வை ஏன் வந்தோம் என்று இருந்து. இருந்தாலும் பசுமை ,எங்கும் நிறைந்து காணப்படும் மரங்கள் மனதுக்கு மகிவூட்டியது. வரும் இரண்டுநாளில் இருந்து மழை பெய்யத்தொடங்கியது.
ஆனாலும் பூமி குளிரவில்லை.
கேரளாவின் தலைநகரான திருவனந்த புரத்தின் பேருந்து நிலை மிக மோசமான நிலையில், ஆனால் அங்குள்ள மக்கள் பழக மிக இனிமையானவர்களாக இருக்கின்றார்கள்.நானும் என்னுடன் வந்த தமிழ்ப் பல்கைக்கழகப் பேராசிரியர் மங்கையர்கரசி அவர்களும் கழக்கூட்டத்திலி உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தோம்.அங்கிருந்த அனைத்துப் பெண்களும் மிக அன்புடன் பழகினர்.அவ்விடுதி காப்பாளர் சீனா என்ற பெண் மிகவும் கவர்ந்து விட்டாள் . அப்படி ஒரு பாசத்துடன் பழகினாள்.அவளுக்கு மலையாளம் மட்டிமே தெரியும் ,இருந்தாலும் நாங்கள் சொல்வதைப் புரிந்து கொண்டு எங்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தாள்.அன்புக்கு மொழி தேவையில்லை என்று அப்போது புரிந்தது.

கருத்துகள்

Nilavan இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன சொல்லிக் கொடுத்தாங்க என்பதைச் சொல்லவே இல்லையே..
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பயணம், நல்ல கருத்தரங்கம் என்று நினைக்கொன்றேன்...கருத்தரங்கம் என்ன நடந்தது என்பதையும் சொல்லியிருக்கலாம் அம்மா..
ஜீவி இவ்வாறு கூறியுள்ளார்…
//அன்புக்கு மொழி தேவையில்லை என்று அப்போது புரிந்தது.//

இதே இடத்திற்கு பல வருடங்கள் முன் சென்ற பொழுது பேருந்து வழித்தடத்திலிருந்து சகல சூழ்நிலையிலும் மொழித் தேவை சற்று மிரட்டியதுண்டு. தலைநகரிலும் இதே அனுபவம் பெற்றதுண்டு. ஆனால் கடைசியாக முத்தாய்ப்பாகச் சொல்லிவிட்டீர்களே, அன்புக்கு மொழி தேவையில்லை என்று...
அது முழுமுதல் உண்மை..
நானும் பலசமயங்களில் அந்த அதிசயத்தை உணர்ந்ததுண்டு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்