
அண்மையில் தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை சார்பாக, செந்தமிழ் காவலர் பட்டம் பெற்ற தமிழறிஞர்களுக்குப் பாரட்டு விழா நடத்தினர். இவ்விழாவில் தஞ்சைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இவ்விழாவில் தமிழறிஞர்கள் முதுமுனைவர் இரா.இளங்குமரனனார், பேராசிரியர் பி.விருதாச்சலம்,குன்றக்குடி ஆதினம் பொன்னம்பலடிகள் ஆகியோருக்குப் பாராட்டு வழங்கியதோடு மட்டுமல்லாமல், அறிஞர்கள் ஒவ்வொருவரும் ஒரு தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தவும் ஏற்பாடு செய்திருந்தனர்.
முதலில் பேராசிரியர் பி.விருதாச்சலம் ஐயா அவர்கள்,சிலம்பு தொடர்பான பொழிவினை நிகழ்தினார்கள்.முதுமுனைவர் இளங்குமரன் ,பொன்னம்பல அடிகள் இருவரும் திருக்குறள் தொடர்பான பொழிவினை நிகழ்த்தினார்கள். இவ்விழா மிக பயனுள்ளதாக இருந்தது.
நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு மாணவர்கள் மாணவிகளுடை கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
கருத்துகள்