பழமொழி

கீழேயுள்ள பழமொழி அனைத்துக்கும் ஒரே பொருள். சினத்துடன் இருக்கும் ஒருவனிடம் மேலும் சினத்தை ஊதி பெரிதாக்குவது என்பதே.
இப்படிதான் சிலர் இடம், பொருள், தெரியாமல் நடந்து கொள்கிறார்கள்.


1 . எரிகிற இடத்துல சுக்கை வைத்து ஊதினாற் போல.

2 . எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல் .

3 . எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக் கொள்ளி ?

4 . எரிகிற கொள்ளியில எந்த கொள்ளி நல்லது ?

5 . எரிகிற கொள்ளியை ஏற தள்ளினது போல்.

6 . எரிகிறது நெஞ்சு சிரிக்கிறது வாய் .

7 . எரிகிறதை இழுத்தால் கொதிக்கிறது அடங்கும் .

8 . எரிகிற நெருப்புல எண்ணெய விடலாமா ?

9 . எரிகிற நெருப்புக்குப் பயந்து எண்ணெய்க் கொப்பரையில் விழுந்த மாதிரி .

10 . எரிகிற நெருப்பை எண்ணெய் விட்டு அடக்கலாமா ?

11 . எரிகிற புண்ணில் எண்ணெய் விட்டது போல .

12 . எரிகிற புண்ணில் புளி இட்டது போல.

13 . எரிகிற விளக்கானாலும் தூண்டிகோல் ஒன்று வேண்டும்.

14 . எரிகிற விளக்கில் எத்தனை ஏற்றினாலுத் குறையுமோ ?

15 . எரிகிற வீட்டில் சுருட்டுக்கு எண்ணெய் கேட்டான்.

16 . எரிகிற வீட்டில் பிடுங்குறது ஆதாயம் .

17 . எரிகிற வீட்டை அவிக்கக் கிணறு வெட்டநாள் பார்த்தது போல.

18 . எரிக்கும் நெருப்போடு காற்றுக் கூடியது போல் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்