முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருத்தரங்க செய்தி


கருத்தரங்க செய்தி05-03-2009 வியாழன் அன்று திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில்தமிழ்த்துறைச் சார்பாக “இணையத்தில் தமிழ்” என்ற காட்சி விளக்க தொடர்பானகருத்தரங்கம் ந்டைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லுரியின் முதல்வர்கு.அன்பரசு, சுய நிதிப்பாடப்பிரிவின் பொறுப்பு பேராசிரியர் முனைவர்மதியழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமித்துறைத்தலைவர் திருஇரா.மாணிக்கவாசகன் முன்னிலை வகித்தார். இணையத்தில் தமிழ் என்ற கருத்தரங்கில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர்துரை.மணிகண்டன் இணையம் என்றால் என்ன?அதனின் தொற்றம் வளர்ச்சி பற்றிவிரிவாகக் கூறினார்.1995 ஆம் ஆண்டு சிங்கபூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர்கோவிந்தசாமி அவர்களால் முதன்முதலில் இணையத்தில் தமிழை ஏற்றம் பெறவைத்தவர் என்ற செய்தியைக் குறிப்பிட்டார். தமிழ் இணைய இதழ்களின் தோற்றமும்,வளர்ச்சியும் குறித்துக்காட்சிவிளக்கமாக எடுத்துக்கூறினார். மேலும் தமிழ் இணையை இதழ்களானமுத்துகமலம்,திண்ணை,பதிவுகள், வார்ப்பு, தமிழ்த்திணை, நிலாச்சாரல்,கீற்று,போன்ற இதழ்களை விளக்கிக்காட்டினார். இவ்விதழ்களுக்குப் படைப்புகளைஎவ்வாறு ஒருங்குறியில் அடித்து அனுப்புவது என்ற விபரத்தையும்எடுத்துக்கூறினார்.தமிழ் விக்கிபிடியாவில் தமிழின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிவரும்பங்களிப்பையும், கட்டுரகள்,உலகச் செய்திகளை உடனுக்குடன் தமிழ்ப்படுத்திதமிழ் ஆய்வாளர்களுக்கு அவர்கள் ஆற்றிவரும் தொண்டினையும்எடுத்துக்கூறினார். தமிழ் மரபு அறக்கட்டளையின் தமிழ்ப்பற்றையும் அதற்காக உழைத்துவரும்முனைவர் கண்ணன், பொறியாளர் திருமதி சுபாசினி போன்றவர்களின்பங்களிப்பையும் எடுத்துக்கூறி விளக்கினார்.உலகத்தில் உள்ள தமிழ்ர்கள் தமிழைப் படிப்பதற்காகத் தமிழகத்தில் துணைவேந்தர் வா.செ.குழைந்தைசாமி அவர்களாலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்துணைவேந்த்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்களாலும் தமிழ்இணையப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட செய்தியையும், அதில் இடம்பெற்றுள்ளகதைகள், தமிழ் இலக்கிய நூல்கள், அகராதிப்பணிகள் போன்றஅறியச்செய்திகளையும் விளக்கிக்காட்டினார். இறுதியாக மாணவர்கள், பேராசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்குத் தெளிவானபதிலகளைத் தெரிவித்தார். இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்ததமிழ்த்துறைப்பேராசிரியர்களான முனைவர் ராமசந்த்திரன்,முனைவர்தி.ஆறுமுகம்,செல்வி. ராதிகா அவர்கள் நன்றிகூறினார்கள். மேலும் கணிப்பொறித்துறை, வணிக மேலான்மைதுறை மாணவர்கள், மற்றும்பேராசிரியர்கள், தமிழ் ஆர்வளரகள், பிற கல்லூரி மாணவரகள் பேராசிரியர்கள்இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…

செய்யுளும் உரைநடையும்

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1      குறுந்தொகை
நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…