முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதுமுனைவர் இரா.இளங்குமரனார்


நுங்கள் பாரியைப் பார்த்தேன் முற்றும் சரிதான்.என் அணுக்கராக நீங்கள் இருந்தால் என்னைப் போலவே சொற் பிறப்பு அமைப்பீர்கள் எனத் தேவநேயப்பாவணரால் பாரி என்னும் ஆய்வுக் கட்டுரைக்காகப் பாராட்டப் பெற்று ,அண்மையில் திருச்சி பாவேந்தர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ. அவர்களால் மதிப்புறு முது முனைவர்ப் பட்டமும்,மதுரைப் பல்கலைக் கழகத்தால் செந்தமிழ் காவலர் என்ற பட்டமும் வழங்கப் பெற்று ,தேவநேய பாவணர் வழி நின்று நீடு தோறும் இனியராய் தனித்தமிழ் காவலராய் வாழ்பவர் புலவர் இரா.இளங்குமரனார். 80 வயதை கடந்த நிலையிலும் ஒய்வு இல்லாமல் அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உறுதுணையாக விளங்குகின்றார்.
400 மேற்பட்ட நூல்களை தமிழுலக்கு வழங்கி சிறப்புச் செய்துள்ள பெருமகனாரின் பெருமையையும் நுண்ணிய அறிவு நுட்டபத்தையும் இனங்கண்டு கொண்ட பாரதிதாசன் பல்கலைகழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னம்வைக்கோ அவர்கள் செம்மொழி அந்தணர் இளங்குமரனாரை கலைச்சொல்லாய்விற்கும் சொல்லாய்விற்கும் பயன்படித்திக் கொள்ள இசைந்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தின் வடக்கு எல்லையும்,முகவை மாவட்டத்தின் தெற்கு எல்லையும் சந்திக்கக் கூடிய இடத்தில் உள்ள வாழவந்தாள்புரம் என்னும் ஊரில் ஐயள் வாழவந்தாள்,ஐயன் இராமு என்னும் இணையருக்கு மகவாய் 30-1-1930-இல் பிறந்தார். சிறுவயது முதற்கொண்டே எண்ணிய செயலை முடிப்பவராய் நல்லனவே எண்ணுபவராய் திண்ணிய நெஞ்சராய் தெளிந்த நல்லறிவினராய் வாழ்ந்து வரும் பண்பாளர்.

மருத்துவப் பணி உடல்நலப்பணி.ஆசிரியப் பணி உளநலப் பணி.ஆதலால்,ஒன்றற்கு ஒன்று குறையாதது.உயிரோடு விளையாடும் செயலாற்றும் செயற்படுத்தும் உயிர்கலைகள் என்பதை உணர்ந்து 8-4-1946 ஆம் முதல் ஆசிரியப்பணியினை ஏற்று சிறப்புற பணியாற்றியதால் நல்லாசிரியர் விருது 26.07.1978 ஆம் ஆண்டு அவரைத் தேடி வந்தது. அதன் தொடர்ச்சியாக,

சைவசித்தாந்த கழகத்தின் வழி பல்வேறு அரிய நூல்களை ஆக்கியும் புதுக்கியும் வெளியிட்டு அப்பதிப்பகத்திற்குப் உறுதுணையாக இருந்ததால் 4-1-1978 ஆம் ஆண்டு மறைமலையடிகள் நூலக இருபதாம் ஆண்டு நிறைவு விழாவில்கழகச் இலக்கியச் செம்மல் என்னும் விருதினை வழங்கி பாராட்டியது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

16-12-1978 இல் பாண்டித் துரையார் பைந்தமிழ் பேரவை இலக்கியச் செம்மல் என்னும் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.11-6-88 இல் திண்டிக்கல் சின்னாளப்பட்டி சன்மார்க்க சபையினர் வள்ளுவர் வள்ளலார் தமிழ்ச்சித்தர் ஆய்வினைப் பாராட்டி இலக்கியச் செம்மல் என்னும் விருதினை வழங்கியது.13.08.1991 இல் தமிழ்க்கடல் என்னும் விருதும்,01.09.1994 இல் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திரு.வி.க.விருதும்,15.1.1995 இல் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தால் திருக்குறள் செம்மல் என்னும் விருதும்,28.11.1996 இல் திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் சார்பில் மீனாட்சி சுந்தரனார் விருதும்,திருச்சிராப்பள்ளி திருக்குறள் பேரவையின் சார்பாக

21.1.1995 இல் குறள் ஞாயிறு விருதும்,மதுரை புரச்சிக் கவிஞர் மன்றம் சார்பில் 21.06.97 இல் பெரியார் விருதும்,1.2.1999 இல் தென்னிலை விருதும்,தஞ்சையில் நிகழ்ந்த தமிழகப் பெருவிழாவில் 25.4.1999 இல் மொழிப்போர் மறவர் என்னும் விருதும்,4.5.1999 இல் திருக்கோவிலூர் கபிலர் விழாவில் கபிலவாணர் விருதும்,
14.5.2000 இல் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை சார்பில் திருக்குறள் விருதும்,சென்னை கம்பன் கழகம் 8.8.2000 இல் கம்பர் விருதும், 1,2.11.2001 இல் நாமக்கல்லில் நடைப்பெற்ற தமிழகப் பெருவிழாவில் தமிழ்ச் சான்றோர் விருதும்,பன்னாட்டு தமிழுறவு மன்றம் மதுதைக் கிளையின் சார்பில் 5.5.2002 இல் திருக்குறள் சான்றோர் விருதும், பதிப்புச் செம்மல் மெய்யப்பனார் எழுபானெ ஆண்டு விழாவில்
27.6.2003 இல் தமிழியக்கச் செமெமல் என்ற விருதும், புதுவை பண்டுவார் மகிழ்கோ அவர்களால் பண்டுவர் என்ற விருதும்,திருவாடுதுறைத் திருமடம் 8.3.2004 இல் திருக்குறள் செம்மல் என்ற விருதும்,21.7.2002 இல் உலகப் பெருந்தமிழர் என்னும் விருதும் ,பெற்ற பெருமைக்குரியவர் பெருமகனார் முதுமுனைவர் இரா. இளங்குமரனார்.

இப்பெருமகனாருடன் பழகும் வாய்ப்பினைக் கடந்த நான்காண்டுக்கு முன் பெற்றேன்.அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராகக் கொளல் என்னும் வள்ளுவ மொழிக்கேற்ப அவரை சிக்கெனப் பிடித்துள்ளேன் .அவர்களுடன் பழகி நாள்முதல் நான் அறிந்தவரை ஒய்வு என்பதே இல்லாமல் உழைத்துக் கொண்டே இருக்கும் பெருமகனார் .ஈத்துவக்கும் இன்பமுடையராய் திருச்சிக்கருகே அல்லூர் என்னும் ஊரில் தவச்சாலை நிறுவி ஆயிரக்கணக்கான நூல்கள் ஆய்வாளர்கள் பயன்கொள்ளும் வகையில் சிறந்த நூலகத்தை அமைத்து தமிழுலகுக்கு அறிவு ஈகையராய்த் திகழ்கின்றார்.

கருத்துகள்

எம்.ஏ.சுசீலா இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் கல்பனா,
வாய்ச்சொல் வீரம் காட்டாமல்,மெய்யான தமிழ்ப்பணி புரியும் இளங்குமரனார் போன்ற பெருமக்களால்தான் தமிழ் செம்மொழியாக உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது. அவரைப்பற்றிய தெளிவான, விரிவான கட்டுரையை வலையில் எழுதித்தமிழுக்குச்சிறப்பு சேர்த்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவை போன்ற கட்டுரைகளைத்தமிழ் இலக்கியவாதிகளாகிய நாம்தான் எழுத வேண்டும். பிற அக்கப்போர்களை எழுத ஆயிரம் பேருண்டு.உங்கள் இலக்கிய ஆர்வமும், எழுத்துப்பணியும் நாளும் தழைத்து வளரட்டும்.
பிரியமுடன்,
எம்.ஏ.சுசீலா.http://www.masusila.blogspot.com
யாவரும் கேளிர் இவ்வாறு கூறியுள்ளார்…
semmozhi anthanar enbathin artham ariya virumbukiren Kalpana.
யாவரும் கேளிர் இவ்வாறு கூறியுள்ளார்…
semmozhi anthanar enbathin artham ariya virumbukiren Kalpana.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செய்யுளும் உரைநடையும்

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1      குறுந்தொகை
நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…