அண்ணா கருத்தரங்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் சார்பாக அண்ணா நூற்றாண்டினைக் கொண்டாடும் வகையில் இரண்டுநாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய்பட்டிருந்தது.அது தொடர்பான கருத்தரங்க முதல் நாள் நிகழ்வு இன்று நடைப்பெற்றது. துணை வேந்தர் ,மொழிப்புல முதன்மையர்,சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் குத்து விளக்கு ஏற்ற விழா இனிதே தொடங்கியது.மொழிப்புல முதன்மையர் அனைவரையும் வரவேற்று, அண்ணாவைப் பற்றி சிறந்த அறிமுகவுரை நல்கினார்கள். தலைமையுரை மாண்பமை துணைவேந்தர் இராமநாதன் வழங்கினார்கள்.சிறப்பு விருந்தினர் பேராசிரியர் மா.நன்னன் தமிழுலகம் நன்கறிந்த தமிழறிஞர் அவர் தமது உரையின் தொடக்கத்தில் ‘வணக்கம்’ என்று நான் கூறமாட்டேன் வாழ்த்து எனக் கூறினார்.அதற்கு அவர் அளித்த விளக்கம் சிந்திக்க வைப்பதாக இருந்தது.நம்முடைய சங்க இலக்கியங்களில் மன்னர்களை வாழ்த்துகின்றார்களே ஒழிய வணங்கவில்லை.வணங்குதல் என்பது பிற்காலத்தில் தோன்றியது எனக் கூறினார்.மேலும் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். உணவு இடைவெளிக்குப் பிறகு பேராசிரியர் முனைவர் சி.மறைமலை அவர்கள் அண்ணாவைப் பற்றி சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள்.ஆய்வு கட்டுரைகள் ஏதேனும் ஒரு சிக்கலை மையப்படித்தி இருக்க வேண்டும் எனவும் ,ஆய்வு தொடர்பாக பிற அறிஞர்கள் கூறும் கருத்துக்களும் இறுதியாக ஆய்வாளர் என்ன கூறக் கருதுகின்றார் என்பதாக அமைய வேண்டும் என எடுத்துரைத்தார்.கூறினார்.இறுதியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் கணினி பயன்பாட்டை நடைமுறைப் படுத்த வேண்டும் எனக் கூறி அது தொடர்பான ஐயங்களைத் தான் தீர்த்து வைப்பதாகக் கூறினார். இறுதியாக பேராசிரியர் ஞானம் அம்மா அவர்கள் நன்றி நவின்றார்கள்.ஒருங்கிணைப்பாளாராக முனைவர் செந்தில் அவர்கள் இருந்து சிறப்பாக ஒருங்கிணைத்தார்.நாளை அமர்வுகள் தொடரும்.

கருத்துகள்

முனைவர் மு.இளங்கோவன் இவ்வாறு கூறியுள்ளார்…
பேராசிரியர் அம்மா அவர்களுக்கு வணக்கம்.அண்ணா குறித்த கருத்தரங்கச் செய்தி பதிவிட்டமைக்கு நன்றி.
முனைவர் சி.இ.மறைமலை ஐயா குறிப்பிட்டதுபோல் நம் தமிழகத்துக் கல்வி நிறுவனங்கள் யாவும் கணிப்பொறி,இணையத்தைப் பயன்படுத்த வேண்டும்.தமிழ் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது.

மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்