முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழறிஞர் பேராசிரியர் பி.விருத்தாசலம்'கெடல் எங்கே தமிழின் நலம்,அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க'.
என்னும் பாடல் அடிகளுக்கேற்ப வாழ்ந்து வருபவர் பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள்.
தனித்தமிழ் மீது பற்றுக்கொண்ட இவர்கள் தமிழியக்கம் தழைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு நிறைவேற்றியுள்ளார்கள்.
குறிப்பாக,
சென்னைப் பல்கலைக்கழக அடையாளச் சின்னத்தில் இருந்த
DOCTRINA VIM PROMOVET INSITAM
என்னும் குறிக்கோள் மொழியைத் தமிழில் மாற்ற வேண்டுமென 8.11.1976,30.31977,30.11.1977
ஆகிய நாள்களில் நடைபெற்ற மூன்று பேரவைக் கூட்டங்களில் தீர்மானங்கள் தந்து போராடியதன் விளைவாக
சென்னைப் பல்கலைக்கழ அடையாளச் சின்னத்தில்
கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும்
என மாற்றியதையும்,சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பெறும் பட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்
வழங்கப்பெற்றதை,தமிழிலும் வழங்க வேண்டும் கூறி மாற்றியதையும் கூறலாம்.
தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தின் அருகில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி என்னும் சிற்றூரில்
திருவாட்டி தென்காவேரியம்மையாருக்கும்,திருவாளர் பொ.பிச்சை நாட்டார் என்பாருக்கும்அருமை மகவாய் 22-5-1940-இல் தோன்றினார்.
இவர் திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப் பள்ளி,பூண்டி திரு.புட்பம் கல்லூரி,திருவையாறு அரசர் கல்லூரி முதலிய
கல்வி நிறுவனங்களில் பயின்று,தங்கசாலையில் உள்ள தொண்ட மண்டல துளுவ வேளாளர் மேனிலைப் பள்ளியிலும்,
சென்னை பெரம்பூரில் உள்ள சமாலியா மேனிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்து,பின்பு
தஞ்சையருகே யுள்ள உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியில் 28 ஆண்டுகளில் 24 ஆண்டுகள்
முதல்வராக இருந்து சிறப்பித்துள்ளார்கள் பணிபுரிந்துள்ளார்கள்
பேராசிரியராக இருந்த காலத்து மாணக்கருக்கு பாடம் சொல்லும் திறம் அனைவனரும் விரும்பத்தக்கதாக இருந்தது
தெளிவான குரல்,ஆழமான கருத்து,ஓசை நயத்த்தோடு செய்யுளை எடுத்துரைக்கும் முறை,பழம்
நூல்களின் தோய்வு காரணமாக பல மேற்கோள்கள்,நகைச்சுவையோடு கூடிய உலகியல் பார்வை,சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த அகன்ற நுட்பமான
பார்வை உடையதால் இசையோடும் நயத்தோடும் விளக்கும் திறன் என இவருடைய
கற்பிக்கும் முறையால் தமிழ் வகுப்புக்கள் மாணவர்களால் பெரிதும் விரும்பப்பெற்றன.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1976,1977,1978 ஆகிய மூன்று ஆண்டுகள் பேரவை(senate)உறுப்பினராகவும்,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்
1982 முதல் பேரவை உறுப்பின்னராகவும்,ஆட்சிகுழு உறுப்பினராகவும்(syndicate) கல்விப் பேரவையிலும்(standing committe for Acadamic affair)
பாடத்திட்டக் குழுக்களிலும்,பல்கலைக்கழகத் திட்ட குழுக்களிலும் உறுப்பினராக இருந்து தமிழியக்கம் தழைக்க பல தீர்மானங்கள்
கொண்டு வந்து அதில் 120 தீர்மானங்களை நிறைவேற்றி சிறப்பாக செயலாற்றியுள்ளார்கள்.
நாவலர் ந.மு. வேங்கடசாமி ஐயா அவர்கள் தமிழகத்து மாந்தரனைவரும் தாய்மொழி வழி
ஒரு தலையாகக் கல்வி கற்று மேன்மையனைய வேண்டும் என்ற விருப்பினால் 1921 ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் திருகாட்டுப்பள்ளிக்கு அருகே
திருவருள் கல்லூரி ஒன்று நிறுவக் கருதி , அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள்.அம் முயற்சியைப் பாராட்டி தந்தை பெரியார் நன்கொடையாக உரூபா
ஐம்பது தந்துள்ளார் என்பது குறிப்பிடப்பக்கது.ஆனால் இம் முயற்சி வெற்றி பெறவில்லை.
பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள் பணி ஓய்வு பெற்ற பின்பு ந.மு.வே.ஐயாவினுடைய
எண்ணத்தை நிறைவேற்றும் வகையில்,தஞ்சையருகே வெண்ணாற்றங்கரை கபிலர் நகரில் இயற்கை சூழலோடு கூடிய இடத்தில்
14-10-1992 ஆம் ஆண்டு திருவருள் கல்லூரி என்னும் பெயருடன் நாட்டாரையா அவர்களுடைய பெயரையும் இணைத்து
ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் புலவர் கல்லூரி நிறுவி மேலாண்மை அறங்காவலராக இருந்து
சிறப்புடன் வழிநடத்தி வருகின்றார்கள் .
இக் கல்லூரியில் மூன்றாண்டு கொண்ட புலவர் பட்டயம்(Pulavar Title) வகுப்பும்,
ஐந்து மாதத் தமிழாசிரியர் பயிற்சி சான்றிதழ் வகுப்பும்(Tamil panditi's traning certificate course)நடைபெற்று வருகின்றன.

கருத்துகள்

subramanian madhavan இவ்வாறு கூறியுள்ளார்…
ayyavaip padivuseitha paerasiriyar kalpana sekkizhaarukku mikk nandri.
valarha ungal pani.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ayyavaip padivuseidha ungalukku en paaraattukkal.valarha. vaazhththukkal.
subramanian madhavan இவ்வாறு கூறியுள்ளார்…
ayyavaip padivuseitha paerasiriyar kalpana sekkizhaarukku mikk nandri.
valarha ungal pani.
subramanian madhavan இவ்வாறு கூறியுள்ளார்…
ayyavaip padivuseitha paerasiriyar kalpana sekkizhaarukku mikka nandri.
valarha ungal pani.
subramanian madhavan இவ்வாறு கூறியுள்ளார்…
ayyavaip padivuseitha paerasiriyar kalpana sekkizhaarukku mikka nandri.
valarha ungal pani.
subramanian madhavan இவ்வாறு கூறியுள்ளார்…
ayyavaip padivuseitha paerasiriyar kalpana sekkizhaarukku mikka nandri.
valarha ungal pani.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செய்யுளும் உரைநடையும்

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1      குறுந்தொகை
நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…