இடுகைகள்

தொல்காப்பியம் – அறிமுகம் பகுதி -1

  இலக்கணம்   இலக்கணம் என்பது என்ன என்ற கேள்வியை எழுப்பினோம் என்றால் , பதினேழாம் நூற்றாண்டில் ரிச்சலியால் நிறுவப்பட்ட பிரெஞ்சு அகாதமி 1932-   இல் வெளியிட்டுள்ள இலக்கணம் என்பதற்கான விளக்கத்தை இலக்கணவியல் நூலில் பேராசிரியர் சு . இராசராம் எடுத்துக்காட்டியிருப்பார் . இலக்கணம் என்பது ஒரு மொழியைச் சரியாகப் பேசவும் எழுதவும் பயன்படும் கலை . மொழிக் கூறுகளுக்கிடையேயுள்ள உறவுகளைக் கண்டுபிடிப்பது இதன் நோக்கம் . இவ்வுறவுகள் இயற்கையானதாகவோ மரபுவழிப்பட்டதாகவோ இருக்கலாம் . இலக்கணக் கலைஞனின் கடமை இம்மொழியின் சரியான பயன்பட்டை விளக்குவதாகும் . அதாவது தூய்மையான மொழியை எழுதும் புலமை மிக்கோரும் நூலாசிரியரும் பேசும் மொழியை விளக்குவதாகும் . பிறமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து மொழியை இவர்கள் காக்கின்றனர் . இலக்கணத்தின் விதிகளைப் பொருத்தவரையில் அவை காரண காரிய விளக்கங்களுக்கு உட்பட்டவை . மனித மனத்தின் இயல்பான போக்குகளிலிருந்து வருவிக்கப்பட்டவை அவை . நமக்கு கிடைத்துள்ள முழுமுதல் இலக்கண நூல் தொல்காப்பியமே . ஆசிரியர் தொல்காப்...