இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனித குலத்தின் நம்பிக்கை - டாக்ஸி டிரைவர்

படம்
             தென் கொரியாவின் அரசியல் சூழல் 1980 இல் மிக கொந்தளிப்பான காலக்கட்டமாக இருந்தது. காரணம் 1979 அக்டோபரில் அதிபர் பார்க் சுங் –ஹீ படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து   ஜெனரல் சுன் டூ ஹ்வானின் இராணுவ ஆட்சியும், அடக்குமுறையும், நாடு முழுதும் ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் வெடித்தெழுந்தன. குறிப்பாக குவாங்ஜூ பகுதியில் ஏற்பட்ட மக்களெழுச்சி காரணமாக இராணுவம் மக்களை அடித்து கொடுமை படுத்தி,   பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், துப்பாக்கி சூட்டில் பலர் மாண்டனர். இச் செய்தியை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கில் வந்த ஜெர்மன் பத்திரிக்கையாளரை தென்கொரியாவின் நகரமான சியோலில் இருந்து குவாங்ஜூ அழைத்துச் சென்ற ஓட்டுநரின் கதையும் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் அதனைக் கடந்து அவர்கள் குவாங்ஜூவிலிருந்து எப்படித் தப்பி வந்தார்கள் என்பதைப் பற்றி பேசும் படம் TAXI DRIVER. தென் கொரிய திரைப்பட இயக்குநர் கிம் கி டுக்கின் உதவி இயக்குநர் ஜாங் கூன் 2017 இல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் - உறவுகளின் மொழி

  உறவு என்னும் பெயர்ச்சொல்லுக்கு அடைதல், தொடர்பு (பிணைப்பு), நட்பு, சுற்றம், அன்பு, விருப்பம் என்னும் பொருள்கள் உள்ளன [1] . மனித வாழ்க்கைக்கு உறவு என்பது அடிப்படை. ஒருவரோடு ஒருவர் தொடர்பு இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. குடும்ப உறவு, உற்றார் உறவினர், சுற்றத்தார் உறவு, சமூகத்தோடு கொள்ளும் உறவு, இனம், மொழி கடந்த உறவு என விரிந்து மானுடம் இயக்குகிறது. உறவு என்பது அன்பின் வெளிப்பாடு, பண்பின் செயற்பாடு. நல்ல உறவு முறைகளும் நல்ல உணர்வு முறைகளுமே ஆறறிவு உருவத்தை மனிதனாக்கும். மனித வாழ்க்கையில் உறவுகள் காலங்களை எல்லாம் கடந்து நிற்கின்றன. தொடர்புகள் நிலைக்க ஒன்று பிறிதொன்றுடன் தொடர்பில்லாமல் வாழ்தல் இயலாது. ஒன்று பிறிதொன்றைச் சார்ந்து வாழ வேண்டும். அந்த சார்பு நிலையில் ஒழுங்கு அமைய வேண்டும் அதுதான் மனித உறவு. உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே [2]   நாகரீக காட்டாற்று வெள்ளத்தில் நீந்தி திளைத்த மனிதக்கூட்டம், பண்பாடு என்னும் கரைகளை மெல்ல மெல்ல உருவாக்கி உறவுகளைச் சீர்படுத்தி வாழத் தொடங்கினர். அவர்களே உயர்திணை எனப் போற்றப்பெற்றனர். தமிழ் மொழி பேசும் தமிழ...