ஓஒ...இனிதே....

ஏடெடுத்தேன் எழுத எனை எழுதென்றது வான் என்பான் பாரதிதாசன்.எழுதவேண்டுமென வந்தவுடன் எனை எழுது என்றது குறள்.ஒரு அழகான குறள்.

களவு காலம் அப்பொழுது விழி முந்து கொண்டு தலைவனைக் கண்டு இன்புற்று,அவனைக் கண்டு நாணியது.கண்ணோடு கண் நோக்கிய பிறகு காதல் வளர்ந்தது.அது கற்பில் முடிந்தது.

திருமணம் நடந்து விட்டது.தலைவன் பொருள் காரணமாக அவளை விட்டு பிரிந்து செல்கின்றான்.அவன் வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற காலமும் வந்து விட்டது.ஆனால் தலைவன் வரவில்லை.

உடனே அவளுடைய உடல் பசலை கொள்கின்றது.இணவு உட்செல்லவில்லை.கண் கலங்குகின்றது.உடனே தலைவி கண்ணைப் பார்த்து கூறுகின்றாள்.நீ தானே முதலில் அவரைக் கண்டாய்.நீ பார்த்ததால் தானே எனக்கு இந்த நிலை நன்றாக அழு உனக்கு வேண்டியது தான்
என்கின்றாள்.
பாருங்களேன் அந்த குறளை.

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

கருத்துகள்

சு.செந்தில் குமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் ,
உண்மை .

ஆனால் நான் பிரம்மித்தது

நோக்கினால் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு .
தானை கொண்டதன்ன துடைத்து

விலும்

இவளின்கண் இரு நோக்குளது ஒருநோக்கு நோய் நோக்கு
மற்றதன் நோய்க்கு மருந்து

விலும்.

இப்போது நீங்கள் படிக்கப் போவது உலகின் தலை சிறந்த காதல் வசனம்.

செத்துக் கிடக்கும் வாலியைப் பார்த்து தாரை சொல்வாள்

" உங்கள் மனதில் நானும் என் மனதில் நீங்களும் இருப்பதாக அடிக்கடி கூறுவீர்களே
அப்படியானால் உங்கள் இதயத்தை தைத்த அம்பு என்னைக் கொன்றிருக்க
வேண்டுமே அல்லது நான் உயிரோடு இருக்கும்போது என் மனதில் நீங்கள்
இருந்திருந்தால் நீங்களும் உயிரோடு இருந்திருப்பீர்களே . ஏன் இப்படிப் பொய்
சொன்னீர்கள்?"
சு.செந்தில் குமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
என் கருத்துக்களைப் பிரசுரித்த உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி
துபாய் ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஹா.. அருமை. அருமை. படிக்க, படிக்க இனிமை. இனிமை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்