விடுகதை

விடுகதையை விரும்பாதவர்களே இருக்க முடியாது பெரியவர்கள் முதல் குழந்தைக்ள வரை அனைவரும் விரும்பக்கூடியது .உலகின் பண்பட்ட பண்படாத அனைத்து மொழிகளிலும் விடுகதைகள் காணப்பெறுகின்றன.விடுகதையை ஒரு இலக்கியமாகே கொண்டு போற்றப்பெறுகின்றது.விடுகதைகள் சிந்தனைக்கு விருந்தாவும்,நகைப்பிற்றகுக் களமாகவும் விளங்குகின்றன.இவ்விடுகதையில் உயர்ந்த வேதாந்த கருத்துக்கள் தொடங்கி எளிய உலக வாழ்க்கைப் பொருள் வரையிலும் இடம்பெற்றிருக்கும்.தொல்காப்பியர் விடுகதையைப் பிசி என்று கூறுகின்றார்.இப்படி அறிவுக்கு விருந்தாக அமையும் விடுகதை இன்று அருகி வருகின்றது.
உங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு விடுகதை கூறுகின்றேன் அதற்கு விடை கூறுங்களேன்.
ஒரு விடுகதை பார்ப்போமா?

அங்காடி கொள்ளப்போய் யானை கண்டேன்
அணிநகர் மன்றிலே சேனை கண்டேன்
கொங்காரும் முத்தரசர் தம்மைக் கண்டேன்
கொடித்தேரும் பரிமாவும் கூடக் கண்டேன்
அங்கிருவர் எதிர்நின்று வெட்டக் கண்டேன்
அதுகண்டு யான் தலையைத் தாழ்த்த லுற்றேன் -----நான் யார்?

கூறுங்கள்.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
ம்ம்ம்ம்...கும் தெரியல...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
தெரியவில்லையா சேகரன்...சதுரங்கம்
Eswari இவ்வாறு கூறியுள்ளார்…
விடுகதை நல்ல இருக்கு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

தொகைச்சொற்கள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை