பழமொழி........


மிளகு சிறுத்தாலும் வீரியம் போகுமா?(கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?)
என்ற பழமொழிக்குப் பொருள் ஒருவரின் குள்ள உருவத்தினைக் கொண்டு அவரை எடை போடகூடாது என்பதாகும்.தோற்றத்தை வைத்து எந்த முடிவுக்கும் வரகூடாது என்பதாகும்.

இதனையே வள்ளுவர் உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பர்.மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு என்ற வழக்கு தொடரும் இப்பொருளினையே உணர்த்தும்.

சிறுமையான தோற்றமுடைய மனிதனுக்கு மிளகும்,அவன் திறமைக்கு மிளகின் வீரியமும் ஒப்பு நோக்கப்படுகின்றன.மிளகு சிறுத்தாலும் வீரியம் போகுமா?போகாது குறையாது.வீரியம் என்று இங்கு சுட்டபெறுவது மிளகின் காரமாகும்.மிளகு அளவில் சிறிதாக இருந்தாலும் அதன் வீரியம் குறையாதது .இதன் மூலம் யாரிடமும் எத்திறமையும் ஒளிந்திருக்க கூடும் எனப் புலப்படுகின்றது.

கருத்துகள்

அத்திவெட்டி ஜோதிபாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
பழமொழிப் பகிர்வு நன்று தோழி!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தோழரே........
ராம்ஜி.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவு வழக்கம் போல அருமை.

தமிழில் நடைமுறை அன்றாட வாழ்க்கைக்கு அற்புதமான தகவல்கள் செய்திகள் உள்ளன.

ஆனால் அதை நாம சரியாக சந்தை படுத்தாமல் உள்ளோம், அதுதான் வருத்தமாக உள்ளது.

பரிட்சையில் மதிப்பேன் வாங்குவதோடு இலக்கணத்தை முடித்து கொள்கிறோம்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ராம்ஜி ,உண்மைதான் பல செய்திகள் தமிழில் இருப்பதை நாம் மறந்து விட்டோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொகைச்சொற்கள்

செய்யுளும் உரைநடையும்

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்