முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புலவர் பெருமிதம்


சங்க பாக்களில் புறநாறூற்றுப் பாக்களைப் படிக்கும் பொழுது,சங்க புவலர்கள் தங்களது வாழ்க்கையை எவ்வளவு பெருமித்துடன் வாழ்ந்துள்ளனர் எனபதை அறியலாம்.பரிசு கொடுப்பவர் மன்னராக இருந்தாலும் அவர்கள் உள்ளன்பு இல்லாமல் கொடுக்கும் பரிசினைப் பெறாது அதனை மறுக்கும் துணிவு அப்பொழுது இருந்துள்ளது.புறநானுற்று 159 பாடலில் பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் குமணனை அணுகி ,வறுமைத் துயரால் தன்னைப்பெற்ற வயது முதிர்ந்த தாயும்,அன்பான மனைவியும்,மக்கள் செல்வங்களும் உடல் தளர்ந்து,மேனி வாடி கிடப்பதைக் கூறி,பொருள் பெற வந்திருப்பதாகக் கூறுகின்றார்.அவ்வாறு நீ தரும் பரிசு மனமகிழ்வோடு வழங்கியதாக இருக்க வேண்டும். நீ உள்ளன்பு இல்லாமல் களிறு முதலிய பெருஞ் செல்வம் வழங்குவதைக் கட்டிலும்,மனம் விரும்பி சிறிய குன்றிமணி அளவில் பொருள் வழங்கினால் அதனை மனமகிழ்வோடு எடுத்துச்செல்வேன் என்று கூறுகின்றார்.

உயர்ந்துஏந்து மருப்பிற் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசிலின் கொள்ளலென்;உவந்துநீ
இன்புற விடுதி யாயின்,சிறிது
குன்றியும் கொள்வல்;கூர்வேல் குமண!


ஒருமுறை பெருஞ்சித்திரனார் வெளிமான் என்னும் கொடைவள்ளலை அணுகி தன் வறுமையை நிலையைக் கூறி ,பொருள் நல்குமாறு வேண்டினார்.வெளிமான் தன்பால் வரும் புவலர்களின் தரமறிந்து பரிசில் வழங்க கூடியவன் ,பெருஞ்சித்திரனார் வரும் போது வேறு வேலையில் ஈடுபட்டிருந்தமையால்,தன் தம்பியாகிய இளவெளிமானை அழைத்துப் பரிசு நல்குமாறு கூறுகிறான்.அவன் தம்பி விரிந்த மனமும்,புலவர்கள் வரிசை அறிந்து பரிசினை வழங்கும் திறமில்லாதவன்.அதனால் பெருஞ்சித்திரனாருக்கு மிக குறைந்த பொருளே கொடுக்கின்றான்.இதனை ஏற்க விரும்பாத பெருஞ்சித்திரனார்,குமணன் வழங்கிய களிற்றினைக் காவல் மரத்தில் வெளியில் கட்டி விட்டு,நேராக வெளிமானிடம் சென்று,அவன் நாணுமாறு நீ இரவலர் பலரையும் புரப்பவன் அல்லை;இரவலரைப் புரப்பவர் இல்லாமலும் இல்லை.இரவலர் உண்மையும் என்னையும்,வள்ளல் குமணனையும் பார்த்து அறிந்து கொள்ளக.நின் ஊரிடத்து காவல் மரத்தில் கட்டிய உயர்ந்த நல்ல யானையை உமக்கு பரிசாக தருகிறேன் எடுத்துக்கொள் என்று கூறுகின்றார்.

இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண்இனி;நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த
நெடுநல் யானைஎம் பரிசு

இதே புலவர் இளவெளிமானின் செருக்கையும் அறிவின்மையும் ,புலவர்கள் வரிசையறிந்து போற்றத திறத்தையும் எண்ணி,

பெரிதே உலகம் பேணுநர் பலரே
தகுதியுடையவர்களுக்கு உலகம் விரிந்தது,காப்பவர் பலர் உள்ளனர் உன் பொருள் தேவையில்லை எனக் கூறி செல்கின்றார்.
பெருஞ்சித்திரனார் ஒருமுறை கடையெழு வள்ளல்களில் ஒருவனாகியஅதியமானைக் காணச் செல்லுகின்றார். அதியமான் புவலர்களைப் போற்ற கூடியவன் ,அவர்கள் வரிசை அறிந்து பரிசு வழங்க கூடியவன் என்றாலும்,புவலவர் சென்ற நேரத்தில் வேறு வேலையின் நிமித்தம் காரணமாக அப்புவலரைச் சந்திக்காமல் ,அவரது சிறப்பினைப் பெருமையினை அறிந்து வேறு ஒருவர் மூலமாக பரிசினை வழங்குகின்றான்.அதனை விரும்பாத அப்புலவர்,என்னை வந்து என் தகுதியைக் காணாமல் தந்த இப்பொருளைப் பெற்றுக் கொற்றுவதற்கு யான் ஒரு வணிகவழிப் பரிசிலன் அல்லேன்.என்னை விரும்பி வருக என எதிர்கொண்டு,என் புலமை கண்டு,பின் எனக்கு நல்கும் பரிசு மிக சிறிதாயினும்,எனக்கு அது மிக இன்பம் தருவதாக இருக்கும் என்று கூறி பரிசிலை வாங்க மறுக்கின்றார்.

காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்;பேணித்
தினையனைத் தாயினும் இனிதவர்
துணையள வறிந்து நல்கினர் விடினே


ஒருமுறை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனைக் காணச் செல்லுகின்றார்.அவனோ இவரது பெருமை அறியாது,செல்வச் செருக்கால் கண்மூடியிருந்த வளவன் தான் தரவிருந்த பரிசிலை ,அப்புலவரிடத்து நீட்டினான்.இதனைக் கண்டு வருந்திய அப்புலவர்,யாம் மிகப் பெரும் துன்பம் உற்றாலும் சிறிதும் அறிவுணர்ச்சி இல்லாதவருடைய செல்வம் பயன்படாது;ஆகையால் யாம் அச் செல்வத்தை நினைக்க மாட்டோம்;நல்ல அறிவுணர்ச்சி உடையோரின் வறுமையாயினும்;பயன்படும் ஆதலால் யாம் அவ்வறுமையை உவந்து மிகப்பெரியாக நினைப்போம் என அவனது செறுக்கை சுட்டிக்காட்டி பரிசிலை மறுக்கின்றார்.

மிகப்பேர் எவ்வம் உறினும் ,எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும் பெருமயாம் உவந்துநனி பெரிதே

பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் ஒருமுறை கொடைவள்ளல் கடியநெடுவேட்டுனைக் காண செல்கின்றார் ,அவனோ இவரது புலமை திறத்தை எண்ணி ,தன்னோடு இருக்க வேண்டும் என்ற விருப்பினால்,பரிசிலை வழங்காமல் காலம் நீட்டிக்கின்றான் . பரிசில் கொடுக்காமல் காலம் நீட்டிப்பதை விரும்பாத அப்புலவர் பெருமகனார்,மூவேந்தர்களிடம் சென்றால் கொடையில் விருப்பின்றி,பரிசில் வேண்டி வரும் பரிசிலர்களுக்கு நீட்டித்து வழங்குவது இயல்பு.இதனை அறிந்தே எம்போலும் பரிசிலர் விருப்பின்றி வழங்குவதை விரும்புவது இல்லை.ஆகையால் விரைந்து தருவாயாக.
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்று ஈதல் யாம்வேண் டலமே


உறையூர் ஐணிச்சேரி முடமோசியார் என்ற புலவம் ,ஆய்ஆண்டிரனைக் காணச் செல்கின்றார்.அவரின் சிறப்பினை அறிந்த ஆய் ,அவருக்கு வேண்டி செல்வத்தினை நல்கினான்.அதனால் மகிழ்ந்த அப்புவலர்,அவன் கொடைத்திறத்தைப் போற்றி,நீ இல்லத நாள் ஒன்று வருமானால் ,அப்பொழுது இவ்வுலகு வறுமையுறும்;அந்தாளில் புலவர் இல்லாது ஒழிவர்கள்;ஒருகால் இருந்தால் புலவருகளின் பெருமையறித மன்னர்களை நாடி செல்லமாட்டர்க்ள.

நின்றின்று வறுவிதாகிய உலகத்து,
நிலவன் மாரோ புலவர் ;துன்னிப்
பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடின்று பெருகிய திருவிற்
பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே


இப் பாடல்களை நோக்குழி சங்க கால புலவர்கள் தங்களை மதித்து ,தங்களது பெருமையினை உணர்ந்த வள்ளல்களிடம் மட்டுமே பரிசிலைப் பெற்று வாழ்ந்துள்ளனர்.அவர்கள் தங்களது வாழ்வினைப் பெருமித்துடன் வாழ்ந்துள்ளனர் என்பதை காணலாம்.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
புலவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள் பற்றிய நல்ல ஆய்வாக இருக்கு! எனக்கு நெடுநாளய வருத்தம் அந்த கால புலவர்கள் கடவுளையும் அரசனையும் பாடியே காலம் கடத்தியுள்ளார்கள்(பெரும்பாலும்) மக்களையும் மக்கள் வாழ்க்கையும் பற்றி பாடிய புலவர்கள் குறைவே... திருவள்ளுவரை தவிர..
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
அக பாடல்கள் எல்லாம் வாழ்க்கையைப் பறிறிதானே பேசுகின்றது.......புறப்பாடல்கள் மட்டுமே மன்னைப் பாடிகின்றது...பின்னால் பக்தி இலக்கிய பாடல்கள் இறைவனைப் பாடுகின்றது.நம் அகப்பாடல்கள் எல்லாம் படியுங்கள்.........
வள்ளுவர் வாழ்க்கைகான நெறியைப் பாடியுள்ளார்.....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சேகரன் அவர்களே........

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…

அம்பல் அலர்

அம்பல் அலர் கௌவை என்ற சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.திருக்குறளில் திருவள்ளுவர் அலரறிவுறுத்தல் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.சரி அம்பல் அலர் என்றால் என்ன என்று பார்த்தோம் என்றால் தலைவன் தலைவி காதல் கொண்டு ஒழுகும் செய்தி சிலருக்கு மட்டும் தெரிந்தால் அது அம்பல் எனப்படும்.பலர் அறிந்தால் அதற்கு பெயர் அலர் எனப்படும்.இப்பொழுது கூறுகின்றோமே கிசுகிசு என்று அதைதான் முன்பு அம்பல் அலர் என்று பிரித்துக் கூறியிருக்கின்றார்கள்.

அதாவது அம்பல் என்பது மொட்டு நிலை என்றும் அலர் என்பதை மலர்ந்த நிலை என்றும் கூறலாம்.காதல் எப்பொழுது அம்பலாக மாறுகிறதோ அப்பொழுது அது நன்மையில் முடியும் என்ற கருத்தும் பண்டு இருந்துள்ளது.

அம்பலுக்கு உவமை கூறும் போது ஒலி குறைவாக கேட்க கூடிய கோழி,நாரை போன்றவற்றின் சத்ததையும் ,அலருக்கு உவமை கூறுமிடத்து எங்கும் பரவிகாணக்கூடிய சூரியனின் ஒளி,காட்டுத்தீ,அதிர்ந்து கேட்க கூடிய முரசின் ஒலி,களிற்றின் ஆரவாரம்,வீரர்கள் ஆரவாரம்,அருவியின் ஓசை,பறையோசை,போர்கள் ஆரவாரம் போன்றவற்றை உவமையாக கூறுவதாலும் அம்பல் என்பது சிலர் அறிந்த செய்தியாகவும் அலர் என்பது பலர் அறியக்கூடிய செய்தியா…

செய்யுளும் உரைநடையும்

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1      குறுந்தொகை
நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…