இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எந்தையும் தாயும்

படம்
  நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய நூல் எந்தையும் தாயும். புதுமைப்பித்தனைத் தேடிதேடிப் படிக்கின்ற வாசகர்களுக்கு சிலவற்றை அவர் மகள் என்ற முறையில் கூற ஆசைப்படுகிறேன். இதில் அச்சேறாத சில பகுதிகளும் உண்டு. இது அப்பாவின் வரலாற்றின் பின்பகுதி என்று கூறலாம் எனத் தன்னுடைய இரண்டாவது வயதில் தந்தையை இழந்த தினகரி தன் அம்மா அப்பாவைப் பற்றித் தொடர்ச்சியாக உரையாடியதன் வழியாகவும் அப்பாவின் நண்பர்களோடும் அவருடைய எழுத்துகளோடும் குறிப்பாக அவர் எழுதிய கடிகளிலிருந்தும் தாம் பெற்ற அனுவபவங்களிலுருந்தும் எழுதுகிறார். புதுமைப்பித்தன் ஒரு புறம் தமது கூரிய மொழியால் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வை எழுதிக்கொண்டிருந்தாலும், மறுபுறம் வாழ்வின் துயரம் அவரைத் துரத்திக்கொண்டேயிருந்துள்ளதை தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு நூலை வாசிக்கும்   பொழுது உணரமுடியும். தமது 40 வயதில் இரண்டு குழந்தைகளை இழந்து மூன்றாவது குழந்தையாகப் பிறந்த தினகரின் மீது அளவு கடந்த அன்பும் நேசமும் உடையவராக இருந்துள்ளது அவர் தொடர்ந்து தன் மனைவி கமலாவிற்கு எழுதிய க...

மௌன சாட்சியாய் … இல்லாமல் இருப்போமே

  பெண்ணே அருகில் வா, நான் கூறுவதைக் கேள் பயனுள்ள விசயங்கள் மீது ஒருமுறை உனது ஆர்வத்தைத் திருப்பு. இயற்கை உனக்கு வழங்கிய இச்சமூகம் தட்டிப்பறித்த ஆதாயங்களைக் கருதிப் பார். நீ ஆணுடைய கூட்டாளியாகப் பிறந்து எப்படி அவனுடைய அடிமையானாய் என்பதை அறிவதற்கு அருகில் வா. செயற்கையான நிலைமைகளை எவ்வாறு இயற்கை என்று நினைத்து நீ அதனை விரும்பத் தொடங்கினாய் என்பதை அறிந்திட வா. நீண்டகால அடிமைப்பழக்கம் உன்னைக் கீழ்மைப்படுத்தியதை அறிந்திட வா. சுதந்திரம் புகழ் ஆகியவற்றின் மேன்மைகள் கடினமானவை என்று ஒதுக்கிவிட்டுச் சொகுசான இழிவுகள் போதுமென்று எவ்வாறு தெரிவு செய்தாய் என்பதை அறிந்திட வா. நான் வரைகிற இந்தச் சித்திரம் உன்னை உன் கட்டுக்குள் வைக்கும் என்றால் இதுபற்றி உணர்ச்சி கலவாமல் உன்னால் சிந்திக்க முடியும் என்றால் பயனற்ற உனது வேடிக்கை விளையாட்டுகளுக்குத் திரும்பிவிடு, இதற்கு மருந்து ஏதுமில்லை, இழிவுகள் பழகிவிட்டன. (Choderlos de Loclose, On the Education of W omen) உலகில் பெரும்பாலான பெண்கள் இன்னமும் அஞ்சுகிறார்கள், பசியோடுயிருக்கிறார்கள் மௌனமாகயிருக்கிறார்கள் எல்லாவித தளைகளையுடைய மதத்தால் நிரப்பப்பட்டுள்ளா...

திணையியம்- தமிழின் ஆதி மெய்யியல்

படம்
  சுற்றுச்சூழல் இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில்     முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இயங்கி வருபவர் மு. பாலசுப்பிரமணியம் என்னும் இயற்பெயரைக் கொண்ட பாமயன். நவீன வேளாண்மையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பழந்தமிழரின் திணையியல் வாழ்வியலைப் பற்றித் தமிழ் சமூகத்தோடு தொடர்ந்து உரையாடியும் எழுதியும் வருபவர் . வேளாண்மையை அடிப்படையாக் கொண்டு வாழ்வியலை அமைத்துக்கொள்ளும் ஓர் இயற்கைநேய வாழ்க்கைமுறையை பொதியைச் சோலை என்னும் ஊரினை (கூட்டுறவு வேளாண் நிலமாகத் தென்காசி, சிவகிரி, வாசுதேவன்நல்லூர் அருகே) ஏற்படுத்தி பகுத்துண்ணல், பல்லூயிர் ஓம்பல், தமிழர் வகுத்துள்ள திணை வாழ்வியல், உயிர்ம நேயம் காத்தல் அத்துடன் அன்பையும் நிறைவையும் கொண்ட வாழ்வை எதிர்கால தலைமுறைக்கு உருவாக்கி கொடுத்தல் என்னும் கனவுகளைச் சாத்தியப்படுத்தி வருபவர் பாமயன். வேளாணைமை இறையாண்மை, அள்ளித் தரும் நிலம், அணுகுண்டும் அவரை விதைகளும், நியாய வணிகம், தாணுமாலயன் ஆலயம், முன்னத்தி ஏர் என்னும் நூல்களின் வரிசையில்2025 இல் வெளிவந்துள்ள நூல் திணையியம் தமிழின் ஆதி மெய்யியல். தோற்றுவாய் தொடங்கி நிறைவாக வரை 37 தலைப்புக...