தேனுண்ட கதை

நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் வந்தாலும் ,சில நேரங்களில் தென்றல் போல சில மகிழ்வாக நிகழ்வுகள் நிகழ்வதும் உண்டு.அதனை நாம் மகிழ்வாகவும் ஏற்றுக்கொள்கின்றோம். அந்த நேரத்தில் நம்முடைய பழைய துன்பங்களை மறந்து விடுகின்றோம்.இப்படிதான் ஒருவன் காட்டு வழியே சென்று கொண்டு இருந்தான் .அப்பொழுது யானை ஒன்று அவனைத் துரத்த தொடங்கியது,அவன் யானைக்கு அஞ்சி வேகமாக ஓடினான்,ஓடும் போது செடிகொடிகளால் மறைக்கப்பட்டு இருந்த பாழுங்கிணற்றை அறியாமல் அதில் விழுந்து விட்டான்.

விழுந்தவன் அக்கிணற்றில் தொங்கிக் கொண்டு இருந்த விழுது ஒன்றினைப் பற்றிக் கொண்டு தொங்கினான்.அப்பொழுது ஐந்து தலை நாகம் ஒன்று கடிப்பதற்குச் சீறிக்கொண்டு வந்து,அந்நிலையில் அவன் பிடித்திருந்த விழுதை எலி ஒன்று தன்னுடைய கூரிய பற்களால் கரகரவெற்று கடித்துக்கொண்டு இருந்து. அவ்விழுது அறுந்தால் அவன் அக்கிணற்றுக்குள் விழுந்து மடியவேண்டியதுதான். இந்நேரத்தில் ,இப்படி துன்பத்தில் என்னைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டாயே என்று,இறைவனை நோக்கிப் புலம்பிக்கொண்டு, விண்ணை நோக்கி வாயைப்பிளந்தான்.அப்பொழுது அங்குள்ள மரத்தில் இருந்த தேன்கூடு ஒன்றில் இருந்த சில தேன் துளிகள் அவனுடைய வாயில் விழுந்தன.அவன் அத்துளியை உண்டு,அதன் சுவை சுவைத்துக்கொண்டு,சிறிது நேரம் எல்லா துன்பங்களையும் மறந்து மகிழ்து இருந்தானாம்.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா அற்புதம்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்